Tuesday, 10 December 2019

பேசும் பெருமாள் பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ திருமால் - சுதை/நவபாஷாண

பேசும் பெருமாள் பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ திருமால் - சுதை/நவபாஷாண

7000 வருடம் பழமையான ஆதிகேசவ பெருமாள் ஆலயம், பரமந்தூர், அறந்தாங்கி.
மிகவும் புனித திருத்தலம் திருப்பணிக்காக காத்திருக்கிறது.பெருமாள் நவபாஷாண திருமேனியுடன் காட்சி தருகிறார், முன்னோர்கள் ஆசி இருந்தால் மட்டுமே இங்கு வரமுடியுமாம். ராமாவதார காலத்தில் இந்த ஆலயம் இருந்திருக்கிறது. ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் இங்கு வழிபாடு செய்துள்ளார்கள்.பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட திருத்தலம். ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருப்பணி செய்வோம்.


ஸ்ரீராம அவதாரத்திற்கு முந்தைய யுகாந்திர பழமையுடன் அருளும் பரமந்தூர். ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி பஞ்சபாண்டவர்கள் நேரில்
வழிபட்ட திருக்ஷேத்திரம்.
நாம் வசிக்கும் பூமியில் உள்ள 195 நாடுகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒவ்வொரு ரிஷி வம்சத்தில் வந்தோரே. அவரவர் குடும்பத்திற்கான முனிவரை உணர்விக்கும் புண்ணிய பூமி மிகவும் தொன்மையான சுதை மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், 2019 ஆண்டுக்கான வழிபாட்டு தலங்களில் பரமந்தூரும் ஒன்று.
இங்கு ஆஞ்சநேயர் மிகவும் சிறப்பு காதில் கடுக்கன் மற்றும் தலைக்கு மேல் உயர்த்திய வால் மேலும் முகம் இடப்பாகம் சிரிப்புடனும் வலப்பக்கம் கோபத்துடனும், கை உயர்த்தி ஆசி வழங்கி அருள்பாலிக்கின்றார்.
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் புதுக்கோட்டை அறந்தாங்கி அடுத்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது மற்றும் அடுத்து 4 கிலோமீட்டர் தொலைவில ஆவுடையார்கோவில் உள்ளது.
பரமந்தூர் தளத்தில் அளிக்க பெரும் திதி கொடுத்தல், தர்ப்பணம் , திவசத்தை வசு, ருத்ர, ஆதித்யப் பிதுர்க்கள் , பிதுர் பத்னீயர்கள் , மூதாதையர்கள் நேரில் வந்து ஏற்பர்.
குடும்பத்தில் கண்ணுக்கு எட்டிய வரை முந்தைய தலைமுறைகளில் பலரும் முறையாக வாழாது போனமையால் நெடுங்காலமாக குடும்பத்தில் பிதுர்க்களின் ஆசிகள் கிட்டாது வருந்துவோருக்கு உத்தமப் பிதுர்லோகத் தொடர்பை அருளும் புண்யவளாகம் பரமந்தூர்.
குருவை குலமாமுனிவரைக் காட்டும் பரமந்தூர்
இப்பாடங்கள் அனைத்தையும் எளிதில் புகட்டி ஒவ்வொரு உலகக் குடும்பத்துக்குமான குலமாமுனிவர், அவரவருக்கான தக்க சத்குரு , ஆன்மிக வழிகாட்டிகளையும் தந்தருளும் தலம் பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பூமி.
பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பரமந்தூர் தரிசனம் கிட்டும்
பல்லாயிரம் ஆண்டுகால பிதுர்க்கள் முன்னோர்களை வரவழைக்கும் மோட்சவளாகம்
அவரவர் குடும்பத்துக்கான குலமாமுனிவரை உணர்விற்கும் பெருமந்தூர்
இறைவனை வழிபடுவது பாதாதிகேசம் கேசாதிபாதம் தரிசன முறைகளை கொண்டு வழிபட வேண்டும். பாதாதிகேச தரிசனம் - தெய்வத்தை முதலில் பாதத்திலிருந்து தரிசிக்க தொடங்கி சிறிது சிறிதாக கண்களை மேலே உயர்த்தி தெய்வத்தின் உச்சி கேசம் வரை தரிசிப்பர் பிறகு கேசாதிபாத தரிசனம் - என்பதாக தெய்வத்தின் சிரசின் கேசத்தில் இருந்து துவங்கி சிறிது சிறிதாக கண்களை கீழே நகர்த்தி தெய்வத்தின் பாதம் வரை தரிசிப்பர் இதுவே பாதாதிகேச தரிசனம் கேசாதி பாத தரிசனம் முறை இவ்வாறு நம் பாதம் முதல் கால்கள், கைகள், வாய், காது கண்கள், அறிவு, தலையால் செய்த பாவங்கள் தீர்வதற்கு தெய்வ உருவின் பாதாதிகேச தரிசனம் கேசாதிபாத தரிசனங்கள் உதவும். தலையால் என்ன பாவம் வரும் எனில் இதைச் சொல்லி மாளாது ஏனெனில் கண்கள், மூளை அடங்கிய தலைக்குள்தானே தீயஎண்ணங்கள், முறையற்ற தீயகாமப் பார்வை எல்லாம் தொழிற்சாலை போல் தினமும் தயாராகின்றன.
இறைவன், குரு, பெற்றோர், பெரியோருக்குத் தலை குனிந்து தரையில் வீழ்ந்து தாள் பணிந்து வணங்காததும் கடமை தவறுதாம்.
ஆகவேதான் பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் என்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே நிகழும். இத்தகைய பெருமை வாய்ந்த திருத்தலம் சுற்றுச்சுவர் ராஜகோபுரம் மிகவும் மோசமான சிதிலமான நிலையில் உள்ளது இயன்றவர்கள் பொருளுதவி அளித்து இத்தகைய அரிய பெரும் பொக்கிஷத்தை காக்க தலைமுறை தழைக்க மனமுவந்து வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் கோவில் பற்றிய அரிய தகவல்களை பெற www.agasthiar.org வலை தளத்தை பயன்படுத்தவும். இத்தகவல்கள் அனைத்தும் பொதிகை முனிப் பரம்பறை 1001 வது குருமஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம சித்த பெருமானால் அருளப்பெற்ற சித்த ரகசியங்களை உலக நன்மைக்காக தந்தருளும் ஸ்ரீ அகஸ்திய விஜய வெளியீடு.
அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! அருணாச்சல சிவ ! சிவ ! சிவ ! ராம் ! ராம் !
எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா ! அருணாசலா !
குருவின் திருவடி சரணம்

ஆலய தொடர்புக்கு : அச்சார்யாள் திரு. K. கோபி , +91-94872 08758

No comments:

Post a Comment

Chettinadu Villages Venba

The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu. 'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagar...