Friday, 13 December 2019

Navapashanam - Bairavar - அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில். பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

# நவபாஷாண_பைரவர் - ஆண்டபிள்ளை நாயனார்
# பெரிச்சி_கோவில் சுகம்தரும் சுகந்தவனேஸ்வரர்
1200-1400 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட, பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண பைரவர்.  சிர் இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர், போகர் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட என்று கூறுகின்றனர்.
இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம்..
இங்குள்ள பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.  எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். 
மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார் ..
சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர் அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற இடத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது மிகவும் அதிசயம்..
இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்...
இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு..
இவருக்கு நிவேதனமாக சாத்தப்படும் வடைகளின் நிறம் மாறுகிறது. காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, "சுகந்தவனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment

Chettinadu Villages Venba

The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu. 'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagar...